×

கஞ்சா எண்ணெய் கடத்திய 2 கேரள வாலிபர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை: சென்னை கூடுதல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

புழல்: காரில் கஞ்சா எண்ணெய் கடத்தி வந்த 2 வாலிபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து சென்னை கூடுதல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன்நகர் சோதனைச்சாவடியில், கடந்த 2020ம் ஆண்டு செங்குன்றம் போலீசார், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும்படி ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற காரை மடக்கி சோதனை நடத்தினர். அந்த காரில், 4 பாட்டில்களில் கஞ்சா எண்ணெய் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக, காரில் வந்த கேரளாவை சேர்ந்த ஆதில்மோன்(24), அஜில்சத்யன்(26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கார் மற்றும் 4 லிட்டர் கஞ்சா எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட இரு வாலிபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு சென்னை கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் நீதிபதி, காரில் கஞ்சா எண்ணெய் கடத்தி வந்த வழக்கில் குற்றவாளிகளான ஆதில்மோன், அஜில்சத்யன் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து, அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post கஞ்சா எண்ணெய் கடத்திய 2 கேரள வாலிபர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை: சென்னை கூடுதல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai Extra Special Court ,Puzhal ,Chennai Additional Special Court ,
× RELATED புழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்..!!